/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்டேட்டில் பதுங்கிய சிறுத்தை அச்சத்தில் தோட்ட தொழிலாளர்கள்
/
எஸ்டேட்டில் பதுங்கிய சிறுத்தை அச்சத்தில் தோட்ட தொழிலாளர்கள்
எஸ்டேட்டில் பதுங்கிய சிறுத்தை அச்சத்தில் தோட்ட தொழிலாளர்கள்
எஸ்டேட்டில் பதுங்கிய சிறுத்தை அச்சத்தில் தோட்ட தொழிலாளர்கள்
ADDED : ஆக 06, 2024 06:12 AM
வால்பாறை: வால்பாறையில், தேயிலை காட்டில், சிறுத்தை பதுங்கியதை கண்ட தொழிலாளர்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும், யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.
வால்பாறையில் பருவமழைக்கு பின், வனவளம் பசுமையாக காட்சியளிக்கிறது. மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை வழியாக வரும் யானைகள் வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன.
தனித்தனி கூட்டமாக எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், பகல் நேரத்தில் தேயிலை காட்டிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் முகாமிடுகின்றன. இதனால், எஸ்டேட் தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.
இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள முருகாளி எஸ்டேட் பகுதியில், இரவு நேரத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் கோழி, மாடு, நாய்களை சிறுத்தை கவ்வி செல்கிறது.
இரு நாட்களுக்கு முன் பகல் நேரத்தில், தேயிலை செடிக்குள் சிறுத்தை பதுங்கியது.
இதை கண்ட தொழிலாளர்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர். யானைகளை தொடர்ந்து சிறுத்தையும் தேயிலை காட்டில் முகாமிடுவதால், தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில், சிறுத்தைக்கு பிடித்தமான வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பதையும், யானைகளுக்கு பிடித்தமான வாழை, பலா, கொய்யா போன்றவற்றை பயிரிடுவதையும் தவிர்க்க வேண்டும்,' என்றனர்.