/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
1 லட்சம் பனை விதைகள் நடும் பணி துவக்கம்
/
1 லட்சம் பனை விதைகள் நடும் பணி துவக்கம்
ADDED : ஆக 06, 2024 06:06 AM

சூலுார்: கலங்கல் கிராமத்தில், 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் திட்டம் துவங்கியது.
கலங்கல் ஊராட்சி நிர்வாகம், கலங்கல் கிரீன் பவுண்டேஷன் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து, 1 லட்சம் பனை விதைகளை நடவு செய்யும் பணியை துவக்கியுள்ளன. காசி கவுண்டன் புதூர் பிரிவு குட்டை பகுதியில், பனை விதைகள் நடவு செய்யும் பணியை, தனியார் நிறுவனங்களின் இயக்குனர்கள், சுகன்யா சரவணன் மற்றும் மகேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். தாசில்தார் தனசேகர், ஊராட்சி தலைவர் ரங்கநாதன், துணைத்தலைவர் புஷ்பலதா மற்றும் பவுண்டேஷன் நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் பங்கேற்று பனை விதைகளை நடவு செய்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பனை விதைகளை நடவு செய்தனர்.