/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி
/
பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி
ADDED : ஜூன் 27, 2024 09:45 PM

உடுமலை : பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார்.
இயற்பியல் ஆசிரியர் மகுடேஸ்வரன் வரவேற்றார். என்.எஸ்.எஸ் அலுவலர் சரவணன், 'போதை பொருள் பயன்பாடும் சமுதாய சீர்கேடும் 'என்ற தலைப்பில் பேசினார். வேதியியல் ஆசிரியர் ஜெகநாதஆழ்வார்சாமி நன்றி தெரிவித்தார்.* புங்கமுத்துார் காந்திகலா நிலையம் மேல்நிலைப்பள்ளியில், நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் அசோக்குமார், போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கணித ஆசிரியர் மகேந்திரபாபு, ஆங்கில ஆசிரியர் கோகுல்குமார் போதைபொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுவதன் நோக்கம் குறித்து விளக்கமளித்தனர். பின்னர் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
* ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த வழிபாட்டுக்கூட்டத்தில், போதை பழக்கத்துக்கு ஆளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிபடுத்த முழுமையான பங்களிப்பை வழங்குவேன் என்றும், மக்களின் நல்வாழ்வுக்கு அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
ஆசிரியர் கண்ணபிரான் போதைபொருளால் பல குடும்பங்களின் நிலை மோசமடைந்துள்ளதை சுட்டிகாட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.