/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சந்தை மதிப்பை உயர்த்த கலெக்டருக்கு 'பிளக்ஸ்'
/
சந்தை மதிப்பை உயர்த்த கலெக்டருக்கு 'பிளக்ஸ்'
ADDED : ஆக 04, 2024 02:37 AM

பொள்ளாச்சி:மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில், பொள்ளாச்சி --- திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் நான்கு வழிச்சாலை திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
மொத்தம், 3,649 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பொள்ளாச்சி --- மடத்துக்குளம் 50.07 கி.மீ., மடத்துக்குளம் --- ஒட்டன்சத்திரம் 45.38 கி.மீ., ஒட்டன்சத்திரம் --- கமலாபுரம், 36.51 கி.மீ., என, 131.96 கி.மீ., துாரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது.
அதில், 80 சதவீதம் புறவழிச்சாலையாக அமையும் வகையில் திட்டம் உள்ளது. இந்த பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆச்சிப்பட்டி அருகே நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியில், சந்தை மதிப்பீட்டை அதிகரித்து வழங்க, இட உரிமையாளர்கள் பிளக்ஸ் வைத்து கலெக்டருக்கு வலியுறுத்தினர்.
இட உரிமையாளர்கள் கூறியதாவது:
நிலம் கையகப்படுத்த ஆட்சேபம் இல்லை. சந்தை மதிப்பை விட குறைந்த தொகை வழங்குகின்றனர். சதுர மீட்டருக்கு, 1,800 ரூபாய் வரை தான் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிப்பு ஏற்படும். கலெக்டருக்கு பிளக்ஸ் வைத்து வலியுறுத்தினோம். கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்த உள்ளோம்.
இவ்வாறு கூறினர்.