/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாட்டு சந்தையில் பிளக்ஸ் அகற்றவில்லை: தேர்தல் விதிமுறை இதற்கு பொருந்தாதா?
/
மாட்டு சந்தையில் பிளக்ஸ் அகற்றவில்லை: தேர்தல் விதிமுறை இதற்கு பொருந்தாதா?
மாட்டு சந்தையில் பிளக்ஸ் அகற்றவில்லை: தேர்தல் விதிமுறை இதற்கு பொருந்தாதா?
மாட்டு சந்தையில் பிளக்ஸ் அகற்றவில்லை: தேர்தல் விதிமுறை இதற்கு பொருந்தாதா?
ADDED : மார் 28, 2024 10:40 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி மாட்டு சந்தையில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸில், தமிழக முதல்வர், மறைந்த முன்னாள் முதல்வர் படங்கள் மறைக்கப்படாமல் உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததும், அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருந்த முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் படங்கள், கட்சி கொடிகள் அகற்றப்பட்டன.
பொள்ளாச்சி நகரில், அரசியல் கட்சியினரின், 'பிளக்ஸ்'களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், பொள்ளாச்சி மாட்டு சந்தை அருகே கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.
அந்த கழிப்பிடத்துக்கு முன் துாய்மை இந்தியா திட்டம் 2022 - 23ன் கீழ், 31.28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பொது கழிப்பிடம் கட்டுதல் என்றும், காணொலி வாயிலாக முதல்வர் திறந்த அறிவிப்புடன் பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அந்த பிளக்ஸில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் படங்களும்உள்ளன.
நகரப்பகுதி முழுவதும் இருந்த பிளக்ஸ்கள் அகற்றப்பட்ட நிலையில், இது மட்டும் அதிகாரிகள் கவனிக்காமல் விட்டுள்ளனர். ஆளுங்கட்சி பிளக்ஸ் என்பதால், இதை அகற்றாமல் உள்ளனரா என கேள்வி எழுந்துள்ளது.
அதிகாரிகள் உரிய கண்காணிப்பு செய்து, பாரபட்சம் பார்க்காமல் இதுபோன்று வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

