sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பிளஸ் 1 தேர்வு; கணிதம் வினாத்தாள் ஈஸி மாணவ, மாணவியர் மகிழ்ச்சி

/

பிளஸ் 1 தேர்வு; கணிதம் வினாத்தாள் ஈஸி மாணவ, மாணவியர் மகிழ்ச்சி

பிளஸ் 1 தேர்வு; கணிதம் வினாத்தாள் ஈஸி மாணவ, மாணவியர் மகிழ்ச்சி

பிளஸ் 1 தேர்வு; கணிதம் வினாத்தாள் ஈஸி மாணவ, மாணவியர் மகிழ்ச்சி


ADDED : மார் 25, 2024 10:42 PM

Google News

ADDED : மார் 25, 2024 10:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பிளஸ் 1 கணிதம் மற்றும் வணிகவியல் பொதுத்தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என, மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 1, மாணவர்களுக்கு மார்ச் 4ம்தேதி பொதுத்தேர்வு துவங்கி, நேற்று வரை நடந்தது. நேற்று இறுதித்தேர்வாக விலங்கியல், வணிகவியல், கணிதத்தேர்வுகள் நடந்தது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 1 தேர்வு மொத்தம், 37 மையங்களில் நடத்தப்பட்டது. கணிதம் தேர்வை,1,933 மாணவர்கள், 2,312 மாணவியர் என, 4,245 பேர் எழுதினர். 15 மாணவர்கள், 20 மாணவியர் என, 35 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

விலங்கியல் தேர்வை, 74 மாணவர்கள், 128 மாணவியர் என, 202 பேர் தேர்வு எழுதினர். தவிர, 6 மாணவர்கள், 2 மாணவியர் என, 8 பேர் தேர்வு எழுதவில்லை. வணிகவியல் தேர்வை, 1,529 மாணவர்கள், 1,422 மாணவியர் என, 2,951 பேர் தேர்வு எழுதினர். 30 மாணவர்கள், 15 மாணவியர் என, 45 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.

தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து வருமாறு:

விஸ்வதீப்தி பள்ளி மாணவன் ஆகில்அகமது: கணிதம் தேர்வுக்கு முன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். இருப்பினும், ஒரு மதிப்பெண் வினாக்கள், சற்று கடினமாக இருந்தது. பிற வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.

அபிலாஷ்: ஒவ்வொரு தேர்வுக்கு முன்பாக, ஆசிரியர்கள் வாயிலாக தீவிர பயிற்சி மேற்கொண்டேன். அவ்வகையில், திருப்புதல் தேர்வை மையப்படுத்தி பொதுத்தேர்வுக்கு தயாராகினேன். அந்த வரிசையில், வணிகவியல் தேர்வை எதிர்கொண்ட போது, அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தது. அனைத்து மாணவர்களுக்கும் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

கார்த்திகா: கணித தேர்வில் மூன்று மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. அதேநேரம், ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்து. பிற வினாக்களும் எளிதாக இருந்ததால், விரைந்து பதில் எழுதினேன். முழு மதிப்பெண் கிடைக்கும் என, நம்புகிறேன்.

ஸ்ரீ லதாங்கி வித்யா மந்திர் பள்ளி மாணவி மகாலட்சுமி: கணிதம் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள் இரண்டு புத்தக உள் வினாக்களாக இருந்தன. 2 மதிப்பெண் வினாக்களுள் ஒன்றும், 3 மதிப்பெண் வினாக்களுள் ஒன்றும் பயன்பாடு சார்ந்த வினாக்களாக இருந்தன. மற்ற வினாக்கள் பதில் அளிக்கும்படி எளிமையாக இருந்தன.

பாலதக் ஷிதா: வணிகவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்களுள் ஒன்று, புத்தக உள் வினாவாக இருந்தது. கட்டாய கேள்வி புத்தக உள் வினாவாக இருந்தபோதும் எளிமையாக இருந்தது. சுலபமாக பதில் அளிக்கும் விதத்தில் வினாக்கள் இருந்ததால் அதிக மதிப்பெண் கிடைக்கும்.






      Dinamalar
      Follow us