/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி ஏப்ரல் 1 முதல் துவக்கம்
/
பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி ஏப்ரல் 1 முதல் துவக்கம்
பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி ஏப்ரல் 1 முதல் துவக்கம்
பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி ஏப்ரல் 1 முதல் துவக்கம்
ADDED : மார் 23, 2024 01:42 AM

கோவை;பிளஸ்2 பொதுத்தேர்வு நேற்று நிறைவடைந்தது. தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 1ம் தேதி முதல் தொடங்குகிறது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த 1ம் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. நிறைவு நாளில் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மே 6ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு, வரும் 26ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தேர்வை முன்னிட்டு தேர்வு மைய ஒதுக்கீடு, அறை கண்காணிப்பாளர்களை நியமிக்கும் பணி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவியாளர்கள் ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளில், பள்ளிக்கல்வித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.