தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிளஸ் 2 தேர்வு நிறைவு; பிரியா விடை பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தேர்வு நிறைவு; பிரியா விடை பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தேர்வு நிறைவு; பிரியா விடை பெற்ற மாணவர்கள்


ADDED : மார் 22, 2024 10:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2024 10:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நிருபர் குழு -

பிளஸ்2 பொதுத் தேர்வு நேற்று முடிந்த நிலையில், மாணவ, மாணவியர் ஒவ்வொருவரும், பிரியா விடை பெற்று வீடு திரும்பினர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த ஒன்றாம் தேதி துவங்கியது. அவ்வகையில், மொத்தம், 97 பள்ளிகளைச் சேர்ந்த 3,345 மாணவர்கள், 4,045 மாணவியர் என மொத்தம், 7,390 பேர் தேர்வை எதிர்கொண்டனர்.

நேற்று, உயிரியல், தாவரவியல், வரலாறு அலுவலக மேலாண்மை உள்ளிட்ட பாட தேர்வுகள் நடந்தது. நேற்றுடன் தேர்வு நிறைவடைந்தது. இந்நிலையில், மதியம் 1:15 மணிக்கு மையங்களில் இருந்து, தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ, மாணவியர் உற்சாகம் அடைந்தனர். தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர். மாணவர்கள் சட்டையில் பேனா மை தெளித்து விளையாடினர். சிலர், சக நண்பர்களுடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.

விடுமுறை தொடங்கியதை அடுத்து உற்சாகமாக துள்ளி குதித்து, தாள்களை கிழித்து எறிந்தனர். அதேநேரம், பள்ளி பருவம் முடிந்ததால், ஒவ்வொருவரும் சக நண்பர்கள், தோழிகளை பிரிவதை எண்ணி வருந்தினர். மாணவர்கள் சிலர் குழுவாக ஓட்டல்களுக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

உடுமலை


உடுமலை கோட்டத்தில், 18 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது. இதில், அறிவியல் பிரிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை தேர்வு செய்தவர்களுக்கும், கலைப்பிரிவில் வரலாறு பாடத்தை தவிர, மற்ற பாடங்களை தேர்வு செய்தவர்களுக்கும் ஏற்கனவே தேர்வு நிறைவடைந்துள்ளது.

மாணவர்கள், பொதுத்தேர்வு நிறைவடைந்ததையொட்டி, தேர்வு முடித்துவிட்டு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பள்ளிப்பருவம் நிறைவடைந்ததை எண்ணி, மாணவர்கள் பிரியாவிடை அளித்தும் மகிழ்ந்தனர். பள்ளிக்கு முன்பு நின்று 'செல்பி' எடுத்துக்கொண்டும், கேக் வெட்டியும் கொண்டாடினர்.

பலரும் சட்டைகளில் பேனா மை தெளித்து விளையாடுவதும், ரோட்டில் உற்சாகமாக கூச்சலிட்டும் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us