/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 மாணவி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
/
பிளஸ் 2 மாணவி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
பிளஸ் 2 மாணவி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
பிளஸ் 2 மாணவி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
ADDED : ஜூன் 07, 2024 01:47 AM
திருப்பூர், ஜூன் 7-
பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தேனி, உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 31. திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுாரில் தங்கி, அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது, பிளஸ் 2 மாணவியான, 17 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த 2021ல் அச்சிறுமியை தேனிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பெருமாநல்லுார் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜரானார். இதில், மணிகண்டனுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

