/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ்1 பொதுத் தேர்வு துவக்கம்: 36 ஆயிரத்து, 664 பேர் பங்கேற்பு
/
பிளஸ்1 பொதுத் தேர்வு துவக்கம்: 36 ஆயிரத்து, 664 பேர் பங்கேற்பு
பிளஸ்1 பொதுத் தேர்வு துவக்கம்: 36 ஆயிரத்து, 664 பேர் பங்கேற்பு
பிளஸ்1 பொதுத் தேர்வு துவக்கம்: 36 ஆயிரத்து, 664 பேர் பங்கேற்பு
ADDED : மார் 05, 2025 10:57 PM

கோவை:
பிளஸ்1 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. 128 மையங்களில், 36 ஆயிரத்து, 664 மாணவர்கள் எழுதுகின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த, 3 முதல், 25ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ்1 வகுப்புக்கு நேற்று முதல், 27ம் தேதி வரையும், 10ம் வகுப்புக்கு வரும், 28 முதல் ஏப்., 15ம் தேதி வரையும் நடக்கிறது.
காலை, 10:00 மணிக்கு துவங்கி மதியம், 1:15 மணிக்கு தேர்வு முடிவடைகிறது. பிளஸ்1 வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று தமிழ் மொழிப்பாட தேர்வு நடந்தது.
கோவை மாவட்டத்தில், 366 பள்ளிகளை சேர்ந்த, 36 ஆயிரத்து, 664 மாணவர்கள், 128 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். நேற்றைய தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.