/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமர் மோடி பிறந்தநாள்; இலவச மருத்துவ முகாம்
/
பிரதமர் மோடி பிறந்தநாள்; இலவச மருத்துவ முகாம்
ADDED : செப் 17, 2024 10:21 PM

மேட்டுப்பாளையம் : பிரதமர் மோடியின் பிறந்த நாளை ஒட்டி, பா.ஜ.,வினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து அன்னதானம் செய்தனர். மேட்டுப்பாளைத்தில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.
மேட்டுப்பாளையம் நகர பா.ஜ., சார்பில், பிரதமர் மோடியின், 74ம் ஆண்டு பிறந்தநாள் விழா, பத்திரப்பா சேரன் மஹாலில் நடந்தது.
மேட்டுப்பாளையம் நகர பா.ஜ.,வினர் மற்றும் ஹிந்துஸ்தான் மருத்துவமனை, ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து, இலவச பொது மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாமை நடத்தின.
நிகழ்ச்சிக்கு கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா தலைமை வகித்தார். மத்திய இணையமைச்சர் முருகன், மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட துணைத் தலைவர்கள் விக்னேஷ் கலைவாணி முன்னிலை வகித்தனர். நீலகிரி தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் நந்தகுமார் உள்பட மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மருத்துவ முகாமில் ஹிந்துஸ்தான் மருத்துவமனை டாக்டர்கள் சரவணன், விவேக் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர், 45 பேருக்கு சர்க்கரை நோய் மற்றும் எலும்பு முறிவு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.
ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை டாக்டர் ராஜா தலைமையில், மருத்துவ குழுவினர், 40 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் இருவர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். நகர பா.ஜ., தலைவர் உமாசங்கர் நன்றி கூறினார்.
சிறப்பு வழிபாடு
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ஒட்டி, கருமத்தம்பட்டி, சூலுார் பகுதிகளில் பா.ஜ.,வினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
* சென்னியாண்டவர் கோவிலில் இளைஞர் அணி சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நால் ரோட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட நிர்வாகிகள் சத்திய மூர்த்தி, பரமசிவம், பிரகாஷ், ரேவதி, பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* சூலூர் கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், சூலூர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும், உறவினர்களுக்கும், மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது.
மண்டல தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.