/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி மீது 'போக்சோ '
/
சிறுமி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி மீது 'போக்சோ '
சிறுமி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி மீது 'போக்சோ '
சிறுமி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி மீது 'போக்சோ '
ADDED : மார் 25, 2024 12:00 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போக்சோ வழக்கில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு ஆறு வயது மகனும், நான்கு வயது மகளும் உள்ளனர். அதில், நான்கு வயது மகளுக்கு இருதயம் பிரச்னைக்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சென்னை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுமி இயற்கை உபாதை கழிக்கும் போது ரத்தபோக்கு ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்ததால் அது போன்று வந்ததாக பெற்றோர் நினைத்தனர். ஆனால், மீண்டும் அதே போன்று ஏற்பட்டதால் சந்தேகமடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதற்கிடையே சிறுமியிடம் உறவினர்கள் விசாரித்ததில் தொழிலாளி மனோகரன், 49, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மனோகரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

