/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டத்து தனி வீடுகளில் சிசிடிவி கேமரா, 'பர்கலரி' அலாரம் பொருத்த போலீஸ் அறிவுரை
/
தோட்டத்து தனி வீடுகளில் சிசிடிவி கேமரா, 'பர்கலரி' அலாரம் பொருத்த போலீஸ் அறிவுரை
தோட்டத்து தனி வீடுகளில் சிசிடிவி கேமரா, 'பர்கலரி' அலாரம் பொருத்த போலீஸ் அறிவுரை
தோட்டத்து தனி வீடுகளில் சிசிடிவி கேமரா, 'பர்கலரி' அலாரம் பொருத்த போலீஸ் அறிவுரை
ADDED : மார் 13, 2025 11:42 PM
மேட்டுப்பாளையம்; தனியாக வசிக்கும் வீடுகளில், சிசிடிவி கேமரா, 'பர்கலரி' அலாரம் பொருத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
சமீப காலமாக தோட்டத்து வீடுகளில், தனியாக வசிப்போரை குறிவைத்து கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதையடுத்து, மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைப் பகுதிகளில் உள்ள தோட்டத்து வீடுகள், வயதானவர்கள் தனியாக வசிக்கும் வீடுகள், சுற்றிலும் வீடுகள் இல்லாமல் தனியாக இருக்கும் வீடுகள் போன்றவற்றை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான் கூறியதாவது:- தனியாக இருக்கக்கூடிய வீடுகள், கண்டறியப்பட்டு அப்பகுதிகளுக்கு போலீசார் ரோந்து சென்று, தினமும் கண்காணித்து வருகின்றனர். தனியாக வீடுகளில் வசிக்கும் வயதானவர்கள் மற்றும் தோட்டத்து வீடுகளில் இருப்பவர்களிடம் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும்.
'பர்க்லரி' அலாரம் பொருத்த வேண்டும். பக்கத்து வீடுகளில் இருப்போரிடம் அடிக்கடி பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ள வேண்டும். நாய்கள் கண்டிப்பாக வளர்க்க வேண்டும். அதேபோல் இரவு நேர ரோந்து செல்லும் போலீசார், தனியாக உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் கையெழுத்திட்டு வருவார்கள். அந்நிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் கண்டிப்பாக அவர்கள் குறித்து சந்தேகம் இருப்பின் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் கூறுகையில், ''ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக 100க்கு அழைக்க வேண்டும். போலீசார் எந்நேரமும் ரோந்தில் தான் இருப்பார்கள். தகவல் கிடைத்தவுடன், உடனடியாக அப்பகுதிக்கு வந்து விடுவார்கள். யாரும் அச்சப்பட வேண்டாம்,'' என்றார்.----