/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோதனைச்சாவடியில் போலீசார் சோதனை
/
சோதனைச்சாவடியில் போலீசார் சோதனை
ADDED : ஜூலை 22, 2024 03:00 AM

ஆனைமலை:ஆனைமலை அருகே, மீனாட்சிபுரம் பகுதியில், தமிழக - கேரள போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழக - கேரள எல்லையான, மீனாட்சிபுரம் சோதனைச்சாவடி மற்றும் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி ஆனைமலை எஸ்.ஐ., முருகநாதன், எஸ்.எஸ்.ஐ., மைக்கேல் சகாயராஜ் மற்றும், 10க்கும் மேற்பட்ட போலீசார், கேரள மாநிலம் மீனாட்சிபுரம் போலீசார் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.
அரசு பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்களில், போதைப்பொருட்கள், திருட்டு வாகனங்கள், கடத்தல் பொருட்கள் சம்பந்தமாகவும், மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்தும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இருமாநில போலீசார் திடீரென ஆய்வு மேற்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.