/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு
/
விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு
விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு
விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு
ADDED : செப் 07, 2024 02:03 AM

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூரில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
நாடுமுழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 200க்கும் மேற்பட்ட இடங்களில், விநாயகர் சிலைகள் வைக்கின்றனர். இந்த சிலைகள், வரும் 9ம் தேதி, சாடிவயல் சின்னாறு, நொய்யல் ஆற்றின் கிளை வாய்க்கால்களில் விசர்ஜனம் செய்யப்படும். இதற்காக, 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனையொட்டி, தொண்டாமுத்தூரில், போலீசாரின் கொடி அணிவகுப்பு நேற்று மாலை நடந்தது.
தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு துவங்கிய அணிவகுப்பு, மாதம்பட்டி ரோடு, போளுவாம்பட்டி ரோடு, புத்தூர் பஸ் ஸ்டாப், புத்தூர் ரோடு, சந்தைப்பேட்டை வழியாக வந்து மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் முன்பு அணிவகுப்பு நிறைவடைந்தது.
இதில், தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார், பேரூர் இன்ஸ்பெக்டர் முருகன், மதுக்கரை இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், 80க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.