/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
/
மேட்டுப்பாளையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
ADDED : மார் 29, 2024 12:33 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் போலீசார் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் ரூரல் எஸ்.பி. பத்ரி நாராயணன் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
லோக்சபா தேர்தலையொட்டி மேட்டுப்பாளையம் தொகுதியில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார், மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 283 பேர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
மேட்டுப்பாளையம் அபிராமி தியேட்டர் அருகே இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு ரூரல் எஸ்.பி. பத்ரி நாராயணன் தலைமை தாக்கினார். நகரின் முக்கிய சாலைகளான மேட்டுப்பாளையம் -காரமடை சாலை, ஊட்டி சாலை, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டு என முக்கிய இடங்கள் வழியாக ஊர்வலம் சென்று, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் நிறைவடைந்தது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

