/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடுப்பணையில் சடலம் போலீசார் விசாரணை
/
தடுப்பணையில் சடலம் போலீசார் விசாரணை
ADDED : பிப் 27, 2025 12:14 AM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் கோட்டை பிரிவு அருகே, தடுப்பணையில் சுமார், 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.
கோவை - மேட்டுப்பாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையம் அடுத்த சின்ன மத்தம்பாளையம் கோட்டை பிரிவு உள்ளது. இங்கிருந்து ஒன்னிபாளையம் செல்லும் ரோட்டில், தடுப்பணை அருகே உள்ள பாலத்தின் கீழ் உள்ள தண்ணீரில் சுமார், 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.
உடலின் பல பாகங்கள் அழுகி கிடந்தது. இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. உடலில் சந்தேகப்படும்படியான காயம் எதுவும் இல்லை.
பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கூறு கையில், 'இறந்தவரின் உடல், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது. உடல் கூராய்வு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, இறப்புக்கான காரணம் தெரியவரும்'என்றனர்.