/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொட்டியில் சடலம் போலீசார் விசாரணை
/
தொட்டியில் சடலம் போலீசார் விசாரணை
ADDED : பிப் 28, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம், ; கிணத்துக்கடவு அருகே உள்ள பாலார்பதியை சேர்ந்தவர் ரகுபதி, 19, கூலி தொழிலாளி. இவர் கடந்த இரண்டு மாதங்களாக ஜக்கார்பாளையத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கி பராமரிப்பு பணி செய்து வந்தார்.
அங்குள்ள தொட்டியில் தண்ணீர் நிரம்பி அதிகளவு வெளியே வருவதைக் கண்ட பண்ணை ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது, ரகுபதி தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்தை கண்டு அதிர்ச்சி அடைந்து, தீயணைப்புத்துறை மற்றும் நெகமம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் சடலத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.