/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெற்ற தாயை கொன்ற மகனுக்கு போலீஸ் வலை
/
பெற்ற தாயை கொன்ற மகனுக்கு போலீஸ் வலை
ADDED : மார் 29, 2024 01:33 AM
அன்னுார்;பெற்ற தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை சேர்ந்த முருகன் மனைவி முத்துமாரி, 39. இவர் கடந்த 10 ஆண்டுகளாக, கணவனை விட்டு பிரிந்து கோவை மாவட்டம், அன்னுார் அருகே எல்லப்பாளையத்தில் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார்.
முத்துமாரி அருகில் உள்ள தனியார் பவுண்டரிக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் முத்துமாரி வீட்டில் ரத்த வெள்ளத்தில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
அருகில் ஆட்டாங்கல் கிடந்தது. இதைப் பார்த்த முத்துமாரியின் சகோதரி நாகவல்லி, அன்னுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து முத்துமாரியின் உடலை கைப்பற்றினர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'முத்துமாரிக்கும், அவரது மூத்த மகன் நந்தகுமார், 19. என்பவருக்கும் இடையே சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
இதையடுத்து ஆட்டாங்கல்லால் முத்துமாரியின் தலையில் தாக்கி கொலை செய்துவிட்டு நந்தகுமார் தப்பி சென்று விட்டார்,' என்றனர்.
இதுகுறித்து அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துமாரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தப்பிச் சென்ற நந்தகுமாரை கைது செய்ய தனிப்படை போலீசார் ராமநாதபுரம் விரைந்துள்ளனர்.

