மது விற்றவர்கள் கைது
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பாண்டி, 46; கூலி தொழிலாளி. இவர், நெகமம் ரங்கம்புதூர் டாஸ்மாக் மதுக்கடை அருகே, சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்தின் பேரில் பாண்டியிடம் விசாரணை செய்தனர். இதில் அவர் மது விற்பனை செய்தது உறுதியானது. தொடர்ந்து அவரிடம் இருந்து, 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
இதேபோன்று, கிணத்துக்கடவு வடபுதூர் டாஸ்மாக் மதுக்கடை அருகே, புதுக்கோட்டையைச் சேர்ந்த விக்னேஷ், 32, கூலி தொழிலாளி என்பவரிடம் இருந்து, கிணத்துக்கடவு போலீசார், 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
கோவிலில் பைக் திருட்டு
நெகமம் அருகே, கோப்பனூர்புதூரை சேர்ந்தவர் கோதண்டபாணி, 70. இவர், காமாட்சி அம்மன் கோவிலுக்கு நேற்று சுவாமி தரிசனம் செய்ய பைக்கில் சென்றார். கோவிலில் இருந்து, வீட்டிற்கு செல்ல வெளியே வந்து பார்த்தபோது பைக் காணாமல் போனது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் தேடியும் பைக் கிடைக்காததால் போலீஸ் ஸ்டேஷனில், புகார் அளித்தார். நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் திருடிய நபரை தேடுகின்றனர்.