/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீசார், வருவாய்துறையினர் தபால் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு
/
போலீசார், வருவாய்துறையினர் தபால் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு
போலீசார், வருவாய்துறையினர் தபால் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு
போலீசார், வருவாய்துறையினர் தபால் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு
ADDED : ஏப் 18, 2024 04:13 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் தேர்தல் பணியாற்றுவோரில் விடுபட்டோருக்கான தபால் ஓட்டுப்பதிவு, சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
பொள்ளாச்சி லோக்சபா தேர்தல் நாளை நடக்கிறது. தேர்தலில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோருக்கு, தபால் ஓட்டுப்பதிவு செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
பயிற்சி முகாம் நடந்த இடங்களில், ஓட்டுப்பெட்டி வைத்து தபால் ஓட்டுகள் பெறப்பட்டன. தொடர்ந்து, போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோருக்கான தபால் ஓட்டுப்பதிவு, பொள்ளாச்சி லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டபத்தில் நடந்தது.
தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் வருவாய் துறை அலுவலர்கள், விடுபட்ட போலீசாருக்கான தபால் ஓட்டுப்பதிவு, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அதில், வருவாய்துறை அலுவலர்கள், போலீசார் ஆர்வமாக ஓட்டு அளித்தனர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சியில், போலீஸ், மற்ற மாவட்ட போலீசார், ஊர்க்காவல்படை, ஓய்வு பெற்ற போலீசார், பட்டாலியன் போலீசார் என, மொத்தம், 493 பேருக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. அதில், முதல் நாள், 294 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர். தொடர்ந்து, 199 பேருக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. அதில், 179 பேர் ஓட்டு அளித்தனர்.
அதில் விடுபட்டோர் ஓட்டு அளிக்கவும், வருவாய்துறை அதிகாரிகள் ஜனநாய கடமை ஆற்றிடும் வகையில், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு நடந்தது. வருவாய்துறை அதிகாரிகள், 29 பேர், போலீசார், 12 பேர் என மொத்தம், 41 பேர் ஓட்டுப்போட்டனர்.

