/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குற்றவாளியிடம் மீட்ட பணத்தில் 'கை வைத்த' போலீசார் 'சஸ்பெண்ட்'
/
குற்றவாளியிடம் மீட்ட பணத்தில் 'கை வைத்த' போலீசார் 'சஸ்பெண்ட்'
குற்றவாளியிடம் மீட்ட பணத்தில் 'கை வைத்த' போலீசார் 'சஸ்பெண்ட்'
குற்றவாளியிடம் மீட்ட பணத்தில் 'கை வைத்த' போலீசார் 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 06, 2024 11:03 PM
கோவை : குற்றவாளியிடம் பறிமுதல் செய்த பணத்தை கையாடல் செய்த, சிங்காநல்லுார் போலீசார் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இருகூர் அருகே செங்காந்தள் மலர் விதைகள் இருப்பு வைத்துள்ள குடோனில், 50 கிலோ கொண்ட விதை மூட்டை திருட்டு போனதாக, கடந்த மாத துவக்கத்தில் சிங்காநல்லுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணை நடந்து வந்த நிலையில், சில ஆண்டுகளாகவே தொடர் திருட்டு நடந்துவந்தது தெரியவந்தது.
இதில் தொடர்புடைய குற்றவாளி பிடிக்கப்பட்டு, பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், குற்றவாளியிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில், ரூ.13 லட்சத்தை சிங்காநல்லுார் போலீஸ் எஸ்.ஐ., யூசுப் மற்றும் ஸ்டேஷன் எழுத்தர் சண்முகசுந்தரம் ஆகியோர், மறைத்து கையாடல் செய்துள்ளனர்.
இத்தகவல் தெரிந்து விசாரணை நடத்தியபோது, போலீசார் இருவரும் பணத்தை திரும்ப ஒப்படைத்தனர்.
தொடர் விசாரணை அடிப்படையில், இருவரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.