/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மைவீ 3 ஆட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம்; போலீசார் எச்சரிக்கை
/
மைவீ 3 ஆட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம்; போலீசார் எச்சரிக்கை
மைவீ 3 ஆட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம்; போலீசார் எச்சரிக்கை
மைவீ 3 ஆட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம்; போலீசார் எச்சரிக்கை
ADDED : மே 13, 2024 12:23 AM
கோவை;'மைவீ3ஆட்ஸ் நிறுவனத்தில், முதலீடு செய்யலாம்' என பரவும் தகவலை நம்ப வேண்டாம் என, கோவை மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையை தலைமையிடமாக கொண்ட, 'மைவி3 ஆட்ஸ்' என்ற நிறுவனம் ஆன்லைனில், விளம்பரங்கள் பார்த்து 'லைக்' போடுவது, பொருட்களை வாங்குவது வாயிலாக வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என கூறியது. தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் இந்நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிறுவனம் மோசடியான முறையில், மக்களிடமிருந்து பணம் வசூலித்து வருவதாக வந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்துக்கு மூலிகை மருந்துகளை வினியோகம் செய்த நிறுவனத்தின் உரிமையாளர் விஜயராகவ், போலியான சான்றி தழை பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்டார்.நிறுவனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்ற வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள இந்நிறுவனம், அதன் கிளை நிறுவனங்களில் தனிநபர்கள் முதலீடு செய்வதாக, சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.
குற்றவழக்குகள் நிலுவையில் இருந்தாலும், இந்நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் எனத் தகவல் பரவி வருகிறது. 'அது சட்ட விரோதமானது, மோசடியானது' என, கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். அதை நம்பி யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.