/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு கூட்டம்
/
ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு கூட்டம்
ADDED : செப் 04, 2024 01:29 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், 1,200 ஓட்டுகளுக்கும் அதிகமாக உள்ள ஓட்டுச்சாவடிகளை, இரண்டாக பிரிப்பது குறித்து, ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டுச்சாவடிகள் மறு சீரமைப்பு கூட்டம் நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் அரசகுமார், தேர்தல் பிரிவு துணை தாசில்தார்கள், அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு கூட்டம் நடந்தது.அதில், 1,200 ஓட்டுகளுக்கும் அதிகமாக உள்ள ஓட்டுச்சாவடிகளை, இரண்டாக பிரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், ஓட்டுச்சாவடிகளில் பழுதடைந்த கட்டடங்கள், ஓட்டு அளிக்க தொலைவில் உள்ளவை, இடமாற்றம் தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.பள்ளிகள் தரம் உயர்ந்த பின், அது குறித்து விபரங்களை சேர்ப்பது, ஓட்டுச்சாவடிகளில் உள்ள மின்வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அரசியல் கட்சியினரின் கருத்துகள் கேட்டறியப்பட்டுள்ளன. அதற்கேற்ப, ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்படும்.
இவ்வாறு, கூறினர்.