/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலிடெக்னிக் மாணவர் கூடைப்பந்து
/
பாலிடெக்னிக் மாணவர் கூடைப்பந்து
ADDED : ஆக 28, 2024 01:28 AM

கோவை;பாலிடெக்னிக் மாணவர்களுக்கு மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று நடந்தது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான இண்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் (ஐ.பி.ஏ.ஏ.,) சார்பில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று நடந்தது.
போட்டியை பி.எஸ்.ஜி., கல்லுாரியின் மெக்கானிக்கல் துறை தலைவர் மோகன் சிவக்குமார் துவக்கி வைத்தார். இதில் ஆறு கல்லுாரி அணிகள் போட்டியிட்டன.
நேற்று நடந்த முதல் அரையிறுதிப்போட்டியில் வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி அணி 42 - 26 என்ற புள்ளிக்கணக்கில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியையும், மற்றொரு போட்டியில் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி அணி 64 - 22 என்ற புள்ளிக்கணக்கில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.