/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆவணி அவிட்டத்தில் பூணுால் மாற்றும் விழா
/
ஆவணி அவிட்டத்தில் பூணுால் மாற்றும் விழா
ADDED : ஆக 20, 2024 02:24 AM

- நிருபர் குழு -
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டாரப்பகுதி கோவில்களில், பூணுால் மாற்றும் விழா நடந்தது.
ஹிந்துகளின் முக்கிய பண்டிகையான ஆவணி அவிட்டம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கோவில்களிலும், மடங்களிலும் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பூணுால் மாற்றுவதற்கான யாகங்கள் நடத்தப்பட்டன. உலக நலன், சமுதாய முன்னேற்றம், குடும்ப வளர்ச்சி ஆகியவற்றுக்காக பிரார்த்தனை செய்து, பிராமணர்கள், வைஸ்சியாள் உள்ளிட்ட சமூகத்தினர் புதிய பூணுால் மாற்றினர்.
பொள்ளாச்சி ஸ்ரீ விநாயகர் பஜனை மடத்தில், பூணுாலை அகற்றி, புதிய பூணுால் அணிந்து கொண்டனர். மந்திரங்கள் முழங்க ஹோமங்களுடன் பூணுால் மாற்றும் விழா நடந்தது.
ஆனைமனை ஈஸ்வரன் கோவிலில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் விழா நடந்தது. ரிக், யஜுர், சாம வேதங்கள் அடிப்படையில், பூணுால் மாற்றிக் கொண்டனர். ஆனைமலை தமிழ்நாடு பிராமண சங்கத்தின் வாயிலாக ஈஸ்வரன் கோவிலில், 35 பேர் ஆவணி அவிட்ட விழாவில் பங்கேற்றனர்.
* உடுமலை பிராமண சேவா சமிதி சார்பில், ராம அய்யர் திருமண மண்டபத்தில், ஆவணி அவிட்டத்தையொட்டி, முதலில், ரிக் வேத, யஜுர் வேத உபாகர்மா நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ரமேஷ் வாத்தியார் தலைமையில், பிராமண சமூக மக்கள் பங்கேற்று பூணுால் மாற்றிக்கொண்டனர். ஆவணி அவிட்டம் சிறப்பு ேஹாமம் நடந்தது.
உடுமலை தென்னை மரத்து வீதி ஏகாம்பரேஸ்வர் சமேத விஸ்வகர்மா காமாட்சி அம்மன் கோவிலில், ஆவணி அவிட்டம் பூணுால் அணியும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.