/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்வாய் அமைப்பில் தரமில்லை; மழைநீர் செல்ல வழியில்லை! காந்திபுரம் பகுதியில் கவனிக்க வேண்டும் கார்ப்பரேஷன்
/
கால்வாய் அமைப்பில் தரமில்லை; மழைநீர் செல்ல வழியில்லை! காந்திபுரம் பகுதியில் கவனிக்க வேண்டும் கார்ப்பரேஷன்
கால்வாய் அமைப்பில் தரமில்லை; மழைநீர் செல்ல வழியில்லை! காந்திபுரம் பகுதியில் கவனிக்க வேண்டும் கார்ப்பரேஷன்
கால்வாய் அமைப்பில் தரமில்லை; மழைநீர் செல்ல வழியில்லை! காந்திபுரம் பகுதியில் கவனிக்க வேண்டும் கார்ப்பரேஷன்
ADDED : மே 21, 2024 12:54 AM

விடிந்தாலே விபத்துதான்
மரக்கடை, புது தியாகராய வீதியில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு , பாதாள சாக்கடை பணிகளுக்கு சாலை தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின் ஜல்லிக்கற்கள் போட்டு சாலை செப்பனிடப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தார் சாலை அமைக்கவில்லை. மேடு, பள்ளமான சாலையால், தினமும் இப்பகுதியில் விபத்து நடக்கிறது.
- சரவணக்குமார், மரக்கடை.
சாலையில் மழைநீர்தேக்கம்
பீளமேடு, எல்லைத் தோட்டம் ரோடு, ஏழாவது வீதியில், மழைநீர் வடிகால் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மழைநீர் வடிகால் வழியாக செல்லாமல், சாலையில் குளம் போல தேங்கி நிற்கிறது. தாழ்வான வீடுகளுக்குள் தண்ணீர் வருவதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
- வேலாயுதம், பீளமேடு.
சேற்றில் மாட்டும் வாகனங்கள்
கே.கே.புதுார், 43வது வார்டு, மணியம் காளியப்ப வீதியில், குழாய் பதிப்பிற்காக சாலை தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின்னர், தார் ஊற்றி சாலையை சீரமைக்கவில்லை. மண்சாலையில் மழைநீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறிவிட்டது. சேற்றில் வாகனஓட்டிகள் வழுக்கி விழுகின்றனர்.
- செல்வி, கே.கே.புதுார்,
வடியாத தண்ணீர்
காந்திபுரம், லாஜாபதிராய் வீதியில் சாலை மிகவும் தாழ்வாகவும், மழைநீர் செல்ல போதிய வழியின்றியும் உள்ளது. இதனால், மழை பெய்யும் போது சாலையில் பெருமளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை நின்றாலும், தண்ணீர் வடிவதில்லை. பாதசாரிகள், வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- பாலா, காந்திபுரம்.
தெருவிளக்கு பழுது
வடவள்ளி, 38வது வார்டு, ஏழாவது மெயின் ரோடு, குருசாமி நகரில், 'எஸ்.பி - 32, பி - 4' என்ற எண் கொண்ட கம்பத்தில், பல நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.
- விஸ்வநாதன், வடவள்ளி.
கடும் துர்நாற்றம்
சோமையம்பாளையம் ஊராட்சி, கஸ்துாரிநாயக்கன்பாளையம் இடையர்பாளையம் - வடவள்ளி ரோட்டில், நெடுஞ்சாலை ஓரத்தில், சாக்கடை நீர் குளம் போல தேங்கியுள்ளது. அடிக்கடி சாக்கடை நீர் சாலையில் வழிந்தோடி, கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- ஹரிகரன், வடவள்ளி.
சேதமடைந்த மின்கம்பம்
கோணவாய்க்கால்பாளையம், 99வது வார்டில், போங்காளிபுதுார், 'எஸ்.பி - 21, பி -5' என்ற எண் கொண்ட கம்பம் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கிறது. பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை.
- முத்துக்குமார், 99வது வார்டு.
அடிக்கடி பரவும் காய்ச்சல்
செல்வபுரம், 76வது வார்டு, தில்லை நகர், வ.உ.சி., இரண்டாவது வீதியில், சாக்கடை கால்வாய் முறையாக சுத்தம் செய்வதில்லை. கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.
- சுந்தரம், செல்வபுரம்.
வழுக்கி விழும் வாகனஓட்டிகள்
பீளமேடு, 26வது வார்டு, செங்காளியப்பா நகர், இரண்டாவது வீதியில், மழையில் மண் சாலை முழுவதும் சகதியாக மாறிவிட்டது. பெரிய வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. பைக்கில் செல்வோர் வழுக்கி விழுகின்றனர்.
- வேல்ராஜ், பீளமேடு.
சாக்கடை அடைப்பு
ஹோப்காலேஜ், 57வது வார்டு, பாலன் நகரில் சாக்கடை அடைப்பால், மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நின்றது. குடியிருப்புவாசிகள் தாங்களாகவே கழிவுகளை அகற்றி, கால்வாயை சுத்தம் செய்தனர். சீரான இடைவெளியில், சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.
- திருவேங்கடசாமி, ஹோப்காலேஜ்.
தார் சாலை அமைக்கணும்
ஜி.என்.மில்ஸ், திருமலை கார்டன் பகுதியில், கடந்த பத்து வருடங்களாக புதிய சாலை அமைத்து தரக்கோரியும் நடவடிக்கையில்லை. மழையில் சகதியாக இருக்கும் சாலையில் வாகனங்கள் மாட்டிக்கொள்கின்றன. உடனடியாக, தார் சாலை வசதி அமைத்து தர வேண்டும்.
- பாலாஜி, ஜி.என்.மில்ஸ்.
குழியால் தொடரும் விபத்து
பி.என்.பாளையம், 55வது வார்டில், மாநகராட்சி அலுவலகம் அருகில், சாக்கடை கால்வாய் சீரமைப்பு பணிக்காக குழி தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின் குழியை சரிவர மூடவில்லை. இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர், குழியால் கீழே விழுந்து காயமடைந்தார்.
- பிரசன்ன்,
55வது வார்டு.

