/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேர்மறை சிந்தனை, தியானப் பயிற்சி தேர்வு பயத்தை போக்கும்
/
நேர்மறை சிந்தனை, தியானப் பயிற்சி தேர்வு பயத்தை போக்கும்
நேர்மறை சிந்தனை, தியானப் பயிற்சி தேர்வு பயத்தை போக்கும்
நேர்மறை சிந்தனை, தியானப் பயிற்சி தேர்வு பயத்தை போக்கும்
ADDED : பிப் 27, 2025 11:12 PM
தேர்வு நேரம் நெருங்கி வரும் வேலையில் இன்று மாணவர்களுக்கு இனம் புரியாத ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது. தேர்வு பயம் என்பது எல்லா வயதினரிடையேயும் உள்ள ஒரு பொதுவான உணர்வு. இது நமது கற்றல் செயல்முறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தேர்வு பயம் அல்லது தேர்வு எழுதும் பயம், மோசமான மதிப்பெண்கள்/மதிப்பெண்களுக்கு வழிவகுக்கும்.
இன்று மாணவர்களுக்கு தேர்வு என்றாலே ஒரு வித பயம் தொற்றிக் கொள்கிறது.
நன்றாக படித்து முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவனுக்கும் தேர்வு எழுதும் போதும், எழுதிய பின்னரும் பயம் குறைந்தபாடில்லை. தேர்வு என்பது அறிவுத்திறனை சோதிக்கத்தானே தவிர, அதுவே வாழ்க்கையாகிவிடாது என்கின்றனர் அறிஞர்கள். தேர்வுகளில் தோற்ற பல உலகம் போற்றும் விஞ்ஞானிகளாக மாறிய வரலாறுகள் உண்டு. உங்களுக்கு தேர்வு பயம் இருந்தால், அதைக் குறைக்க சில விஷயங்களைச் செய்யலாம்.
தேர்வுகள் ஒரு பயத்தை ஏற்படுத்தலாம். ஆனால், மன அழுத்தத்தை நிர்வகிக்கவும், தேர்வு நாளில் ஏற்படும் பயத்தை தடுக்கவும் சில வழிகள் உள்ளன. முதல் படி நேர்மறை சிந்தனையைப் பயிற்சி செய்வது.
எதிர்மறை சிந்தனையை தவிர்ப்பது முக்கியம். ஏனெனில் இவை உங்கள் பதட்டத்தை மோசமாக்கும். அதற்கு பதிலாக, நேர்மறை சிந்தனை மற்றும் உறுதிமொழிகளில் கவனம் செலுத்துங்கள்.
இது தேர்வில் மட்டுமின்றி பாடத்தில் கவனம் செலுத்த உதவும். தேர்வுக்கு முன் சுவாசம் மற்றும் தியானப் பயிற்சி செய்வது மற்றொரு பயனுள்ள நுட்பமாகும்.
மாணவர்களுக்கான மற்றொரு முக்கியமான சுய பாதுகாப்பு உத்தி, கடந்த காலத் தேர்வுத் தாள்களை மதிப்பாய்வு செய்வது. இதன் வாயிலாக ஏற்கனவே ஏற்பட்ட பயத்தை போக்கவும், அப்போது ஏற்பட்ட தவறுகளைத் தவிர்க்க உதவும்.
உடற்பயிற்சி, சுயமரியாதை பிரச்னைகள், ஒரு வழிகாட்டியிடம் பேசுதல், தியானம், சுய வெகுமதி, சர்க்கரை உணவுகளைத் தவிர்ப்பது, நன்றாக துாங்குதல், படிப்பு அட்டவணையை உருவாக்குதல், தேர்வு நடைபெறும் இடத்திற்கு சீக்கிரமாகச் சென்றடைதல் ஆகியவற்றை பின்பற்றினால் போதும். தேர்வை எளிதில் வென்று விடலாம்.

