/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் குறைதீர்ப்பு கூட்டம்; 16க்குள் புகார் அனுப்பலாம்
/
தபால் குறைதீர்ப்பு கூட்டம்; 16க்குள் புகார் அனுப்பலாம்
தபால் குறைதீர்ப்பு கூட்டம்; 16க்குள் புகார் அனுப்பலாம்
தபால் குறைதீர்ப்பு கூட்டம்; 16க்குள் புகார் அனுப்பலாம்
ADDED : செப் 12, 2024 09:35 PM
கோவை : மண்டல அளவிலான தபால் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் தங்கள் புகாரை, வரும் 16ம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.
கோவை மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மண்டல அளவிலான தபால் குறை தீர்ப்பு கூட்டம், 'அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், மேற்கு மண்டலம், கே.பி., காலனி தபால் நிலையம் வளாகம், கோவை' அலுவலகத்தில் நடைபெற உள்ளது; தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை, 'துணை இயக்குனர் (Mails & Tech) அஞ்சல் துறை தலைவர், மேற்கு மண்டல அலுவலகம், கே.பி., காலனி தபால் நிலைய வளாகம், கோவை 641030' என்ற முகவரிக்கு, வரும் 16ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். கடிதத்தின் மேலுறையில், 'தபால் குறைதீர்ப்பு கூட்ட புகார்' என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.
பதிவு தபால், விரைவு தபால், பணவிடை தொடர்பான புகார்களில் தபால் பதிவு செய்யப்பட்ட நாள், நேரம், அனுப்புநர் மற்றும் பெறுநர் முழு முகவரி, தபால் பதிவு எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
அஞ்சலக சேமிப்பு கணக்கு, காப்பீடு தொடர்பான புகார்களில், சேமிப்பு கணக்கு எண், காப்பீடு எண், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர், காப்பீட்டாளர் பெயர் மற்றும் முகவரி, தபால் அலுவலகத்தின் பெயர், பணப்பிடித்தம் தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.