/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடியின மக்களுக்கு அஞ்சலக சிறுசேமிப்பு முகாம்
/
பழங்குடியின மக்களுக்கு அஞ்சலக சிறுசேமிப்பு முகாம்
ADDED : மார் 21, 2024 08:39 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, பழங்குடியின குடியிருப்பு பகுதியில், அஞ்சலக சிறுசேமிப்பு மற்றும் காப்பீடு திட்டங்களுக்கான முகாம் நடந்தது.
பொள்ளாச்சி அஞ்சல் கோட்டம் மற்றும் வனத்துறை சார்பில், சின்கோனா தேசிங்குடி மற்றும் கந்தன்குடி பழங்குடியின மக்களுக்கான அஞ்சலக சிறுசேமிப்பு மற்றும் காப்பீடு திட்டங்களுக்கான முகாம் நடந்தது.
அஞ்சல் ஆய்வாளர் வெங்கட், சின்கோனா அஞ்சலக அதிகாரி அரவிந்த் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த முகாமில் மொத்தம், 35 பழங்குடியின மக்கள் பங்கேற்று, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களிலும், அஞ்சலக காப்பீட்டு திட்டங்களிலும் இணைந்தனர் என அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

