/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போஸ்டர் தயாரித்தல், கட்டுரைப் போட்டி: பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
/
போஸ்டர் தயாரித்தல், கட்டுரைப் போட்டி: பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
போஸ்டர் தயாரித்தல், கட்டுரைப் போட்டி: பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
போஸ்டர் தயாரித்தல், கட்டுரைப் போட்டி: பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 28, 2024 12:59 AM
கோவை;அரசு சார்பில் நடத்தப்படும் விழிப்புணர்வு போஸ்டர் தயாரித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொள்ள, பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மை கவ் மற்றும் என்.டி.எம்.ஏ. இணைந்து, போஸ்டர் மேக்கிங் மற்றும் கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, நடத்தி வருகிறது.
'பீட் தி ஹீட்' என்ற தலைப்பில், போஸ்டர் மேக்கிங் மற்றும் வெப்பத் தாக்குதலில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்ற தலைப்பில், கட்டுரைப் போட்டியும் நடத்தப்படவுள்ளது.
வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆறுதல் பரிசாக, 3 பேருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இப்போட்டிகள் தொடர்பான கூடுதல் தகவல்களை, https://ndma.gov.in/, https://www.mygov.in/home/do மற்றும் https://www.mygov.in/task/poster-making-competition-beat-heat/, https://www.mygov.in/task/essay-writing-competition-my-preparedness-heat-wave/ என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம்.
இப்போட்டிகளில், ஜூன் 10ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை, இப்போட்டிகளில் கலந்துகொள்ளச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.