/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுத்தேர்வு பணிகளில் அலட்சியம் வேண்டாம்! முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
/
பொதுத்தேர்வு பணிகளில் அலட்சியம் வேண்டாம்! முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
பொதுத்தேர்வு பணிகளில் அலட்சியம் வேண்டாம்! முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
பொதுத்தேர்வு பணிகளில் அலட்சியம் வேண்டாம்! முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
ADDED : பிப் 24, 2025 09:51 PM
வால்பாறை, ; தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழக முதல்வருக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் (கோவை) மாநில பொதுச்செயலாளர் தமிழ்மணியன், மாநில பொருளாளர் கணேஷ் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு, கடந்த, 2024ம் ஆண்டில் மேல்நிலை அரசு பொதுத்தேர்வு பணிகளில், மிகுந்த மனசோர்வும், இன்னல்களும் ஏற்பட்டது.
சுமார், 75 சதவீதம் பெண் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றும் நிலையில், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின், அலட்சியமான செயல்பாடுகள் மற்றும் குளறுபடி காரணமாக, தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக அறை கண்காணிப்பாளர்கள் பட்டியல் வெளியிட்டதால், 400க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தொலை துார தேர்வு மையங்களில் பணியாற்றும் நிலை ஏற்பட்டது.
பல பெண் ஆசிரியர்களுக்கு, 20 கி.மீ., அப்பால் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால், அவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் இந்த ஆண்டும், மேல்நிலை அரசு பொதுத்தேர்வு பணிகள், கோவை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்று வருவது, ஆசிரியர் மத்தியில் மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலை வெளியிட்டு, சீனியார்ட்டி அடிப்படையில் தேர்வு பணிகள் ஒதுக்க வேண்டும். அறை கண்கணிப்பாளர் பணியிடங்கள் குலுக்கல் முறையில் பின்பற்றாமல், அலுவலக பணியாளர்களால் நிரப்பும் பழைய முறையை பின்பற்ற வேண்டும்.
தேர்வு பணிகள் தொடர்பான அனைத்து பட்டியல்களும் காலம் தாழ்த்தாமல், தேர்வுக்கு, 5 நாட்களுக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்.
மேல்நிலை அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாம்களை பொருத்தவரை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் விருப்பத்தின் அடிப்படையில் வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள விடைத்தாள் திருத்தும் முகாமை தேர்வு செய்யும், நடைமுறையை கடைபிடிக்க வேண்டும்.
உரிய மருத்துவ காரணங்களால், தேர்வு பணியில் விலக்கு கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலனை செய்து, விலக்கு அளிக்க வேண்டும். தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முன் கூட்டியே கலந்தாய்வுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.