/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விசைத்தறியாளர்கள் அமைதி ஊர்வலம்
/
விசைத்தறியாளர்கள் அமைதி ஊர்வலம்
ADDED : பிப் 24, 2025 11:03 PM

சோமனூர்; சோமனூரில் விசைத்தறி சங்கத்தினர் அமைதி ஊர்வலம் நடத்தினர்.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர் பழனிசாமியின், இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சோமனூர் தலைமை அலுவலகத்தில் இருந்து அமைதி ஊர்வலம் துவங்கியது. ஏராளமான விசைத்தறியாளர்கள் பங்கேற்றனர்.
அய்யம்பாளையத்தில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, கோம்பக்காட்டில் நடந்த நிகழ்ச்சியில், தற்போதைய சோமனூர் சங்க தலைவர் குமாரசாமியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, அவரது படத்திறப்பு நடந்தது.
இதில், கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், விசைத்தறியாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

