/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை கோனியம்மன் தேர்த்திருவிழாவில் மின்தடை
/
நாளை கோனியம்மன் தேர்த்திருவிழாவில் மின்தடை
ADDED : மார் 04, 2025 06:21 AM
கோவை; கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா நாளை மதியம், 1:30 மணி முதல் நடக்கிறது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கவுள்ளதால், பாதுகாப்பிற்காக தேர் செல்லும் பாதைகளில், மின்துண்டிப்பு செய்யப்படவுள்ளது.
உக்கடம் துணை மின் நிலையத்திற்குஉட்பட்ட ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி, வைசியாள்வீதி, கெம்பட்டி காலனி, உப்புக்கிணறு சந்து, ராமர் கோவில் வீதி, மீன் மார்க்கெட், குடிசை மாற்று வாரிய பகுதி, அங்காளம்மன் வீதி, பட்டயக்கார அய்யா வீதி, உக்கடம் பைபாஸ்சாலை, உக்கடம் பைபாஸ் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில், மின் தடை செய்யப்படவுள்ளது.
தேர்த்திருவிழா நடைபெறும் மதியம், 1:30 முதல், இரவு, 7:00 மணி வரை, மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்என, மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.