/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் தடை; பள்ளி மாணவர்கள் தவிப்பு
/
மின் தடை; பள்ளி மாணவர்கள் தவிப்பு
ADDED : மார் 12, 2025 11:24 PM
அன்னுார்; கரியாம்பாளையம், துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கரியாம்பாளையம், கிருஷ்ண கவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. அதன் பின்னர் இரவு 10:00 மணிக்கு தான் மீண்டும் மின்சாரம் சப்ளையானது. இதுகுறித்து கரியம்பாளையம் பகுதி மக்கள் கூறுகையில், 'தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
வருகிற 28ம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு துவங்க உள்ளது. இதற்காக மாணவர்கள் படித்து வருகின்ற சூழ்நிலையில், மாதாந்திர மின்தடை கூட இரண்டு மாதத்திற்கு அமுல்படுத்த மாட்டாது என மின்வாரியம் அறிவித்துள்ளது. ஆனால் இங்கு ஐந்தரை மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மாலை மற்றும் இரவு நேரத்தில் மின்தடை ஏற்படாமல் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.