/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 19 முதல் வேலை நிறுத்தம்; விசைத்தறி கூட்டமைப்பு அறிவிப்பு
/
வரும் 19 முதல் வேலை நிறுத்தம்; விசைத்தறி கூட்டமைப்பு அறிவிப்பு
வரும் 19 முதல் வேலை நிறுத்தம்; விசைத்தறி கூட்டமைப்பு அறிவிப்பு
வரும் 19 முதல் வேலை நிறுத்தம்; விசைத்தறி கூட்டமைப்பு அறிவிப்பு
ADDED : மார் 09, 2025 11:47 PM
சோமனூர்; கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், வரும் 19ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளோம், என,விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் சோமனூரில், சோமனூர் சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
அதில், கூலி உயர்வு பெற்று தருவதில், மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் அலட்சியம் காட்டி வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. அவிநாசி சங்க தலைவர் முத்துசாமி, தெக்கலூர் செயலாளர் ஆறுமுகம், பெருமா நல்லூர் தலைவர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் கூறுகையில், 'கடந்த, 15 மாதங்களில் ஒன்பது கட்டமாக கூலி உயர்வு பேச்சு வார்த்தைக்கான கூட்டம் நடந்தது. அவற்றில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காததால் எந்த முன்னேற்றமும் இல்லை.
பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமல் இருப்பதால், கண்டன ஆர்ப்பாட்டம், கருப்பு கொடி கட்டுதல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. வரும், 18ம் தேதிக்குள் கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், 19ம் தேதி காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது என, கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்' என்றனர்.