ADDED : மே 09, 2024 11:19 PM

பெ.நா.பாளையம்;துடியலுார் அருகே வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி இந்து முன்னணி சார்பில் பிரார்த்தனைநடந்தது.
தற்போதைய கோடை காலத்தில், கோவையில் வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவுவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். குளம், குட்டைகள், நீரோடைகள் வற்றியதால் வனவிலங்குகள், மலையோர கிராமங்களை உணவு, தண்ணீர் தேடி முற்றுகையிட்டு வருகின்றன. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில், துடியலுார் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில், மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் உருவை பாலன் தலைமை வகித்தார். பக்தி பாடல்களை பாடி, மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
நிகழ்ச்சியில், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் தியாகராஜன், ஜெய் கார்த்தி, முருகானந்தம், படையப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.