/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை பொழிய தொழுகை கோவில்களில் வழிபாடு
/
மழை பொழிய தொழுகை கோவில்களில் வழிபாடு
ADDED : மே 06, 2024 12:22 AM

கோவை;தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் வெயில் குறைந்து மழை பொழிய வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையிலும் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
வெயிலும், மழையும் இறைவனிடமிருந்தே வருகிறது என்பது இறை நம்பிக்கை. தற்போது நிலவும் கடுமையான வெப்ப சூழலில் காலநிலை மாற்றம் அடைந்து மழை பெய்ய வேண்டும் என்பதற்காக, கரும்புக்கடை சாரமேடு பகுதியில் கோவை மாநகர ஜமாத்துல் உலமா சபை மற்றும் சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நேற்று நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
கோவை பெரியகடைவீதியிலுள்ள லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவிலில் மழைவேண்டிய சிறப்பு வழிபாடுகளும் ஹோமங்களும் நடந்தது. ஆழிமழைக்கண்ணா என்று துவங்கும் திருப்பாவை பாசுரம் பாராயணம் செய்யப்பட்டது.
'மழையை அதை செய்வாய் ரங்கா ' என்று துவங்கும் பாடல் கோவில் உற்சவர் கஸ்துாரி ரங்கநாதரை துதித்து பக்தர்களால் பாடப்பட்டது.
திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதே போன்று கோவையிலுள்ள ஏராளமான கோவில்களில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நடந்தது. திரளானோர் பங்கேற்றனர்.