/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம வரைபடம் தயாரித்து மக்களுக்கு விழிப்புணர்வு
/
கிராம வரைபடம் தயாரித்து மக்களுக்கு விழிப்புணர்வு
ADDED : மே 03, 2024 11:50 PM

கிணத்துக்கடவு, மே 4---
கிணத்துக்கடவு, சொக்கனுார் ஊராட்சியில், வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவர்கள், பங்கேற்பு ஊரக திறனாய்வு பயிற்சி மேற்கொண்டனர்.
பொள்ளாச்சி அடுத்துள்ள, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவர்கள், கிராம தங்கல் திட்டத்தில், கிணத்துக்கடவு ஒன்றியத்தில், இரண்டு மாத பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், சொக்கனுார் ஊராட்சியில், வீரப்பகவுண்டனுார் கிராமத்தில், பங்கேற்பு ஊரக திறனாய்வு பயிற்சி மேற்கொண்டனர்.
கிராமத்தில் உள்ள அடிப்படை தகவல்கள் சேகரித்தல், சமூக வரைபடம், சாலை வரைபடம், தினசரி வரைபடம், பருவத்திற்கு ஏற்ப பயிரிடுதல் குறித்து வரைபடம் வாயிலாக, அப்பகுதி மக்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். இதன் வாயிலாக கிராமங்களை மேம்படுத்த முடியும் என, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.