/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி வாகனங்கள் உலா; போலீசார் கண்காணிப்பு தேவை
/
பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி வாகனங்கள் உலா; போலீசார் கண்காணிப்பு தேவை
பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி வாகனங்கள் உலா; போலீசார் கண்காணிப்பு தேவை
பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி வாகனங்கள் உலா; போலீசார் கண்காணிப்பு தேவை
ADDED : செப் 17, 2024 10:09 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், அச்சக உரிமையாளர்கள், அரசியல் கட்சிகளின் ஐ.டி., பிரிவு பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது வாகனங்களில் 'பிரஸ்' ஸ்டிக்கர் ஒட்டி வலம் வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
போலி செய்தியாளர்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்தும் பொருட்டு, வாகனங்களில் 'பிரஸ்' ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு போலீசார் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். அரசு வழங்கும் 'மீடியா' ஸ்டிக்கர் மட்டுமே வாகனங்களில் பயன்படுத்த வேண்டும்; மற்ற 'பிரஸ்' ஸ்டிக்கர் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பொள்ளாச்சி நகரில், 'பிரஸ்' ஸ்டிக்கர் ஒட்டி அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, அச்சக உரிமையாளர்கள், அரசியல் கட்சிகளின் ஐ.டி., பிரிவு பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது வாகனங்களில் இத்தகைய 'பிரஸ்' ஸ்டிக்கர் ஒட்டி வலம் வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மேலும், ஆழியாறு அணை, வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் இத்தகைய நபர்கள், 'பிரஸ்' ஸ்டிக்கரை சுட்டிக் காட்டி, 'பார்க்கிங்' மற்றும் நுழைவு கட்டணம் செலுத்துவதை தவிர்க்க முற்படுகின்றனர்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பணியாளர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். எனவே, போலீசார், 'பிரஸ்' ஸ்டிக்கர் ஒட்டி வலம் வரும் வாகனங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது: வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படுகிறது. ஊடகத்தில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் ஊடகம் என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம்.
வேறொருவர் பெயரில் உள்ள வாகனத்தில், ஊடகம் என்று ஸ்டிக்கர் ஒட்டி பயன்படுத்தினால் அபராதம் விதிக்க வேண்டும். சில வாகனங்களில் 'போலீஸ்' என, ஸ்டிக்கர் ஒட்டியும் இயக்கப்படுகிறது. அத்தகைய வாகனங்களை, கல்லுாரி பருவத்தை ஒத்த மாணவர்கள், ஓட்டிச் செல்கின்றனர். 'பிரஸ்' மற்றும் 'போலீஸ்' என்று ஸ்டிக்கர் ஒட்டி இயக்கப்படும் வாகனங்களைக் கண்டறிந்து, அதன் உண்மை தன்மையை வெளிக்கொணர வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.