/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினசரி மார்க்கெட்டில் ஏலம் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம்
/
தினசரி மார்க்கெட்டில் ஏலம் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம்
தினசரி மார்க்கெட்டில் ஏலம் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம்
தினசரி மார்க்கெட்டில் ஏலம் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம்
ADDED : ஜூலை 02, 2024 02:27 AM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் காய்கறி சாகுபடி அதிகமுள்ளது. இப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள், தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. மார்க்கெட்டுக்கு கேரள மாநில விவசாயிகள் வருகை அதிகமுள்ளதால், காய்கறிகள் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.
காய்கறிகள் விலை நிலவரம் குறித்து வியாபாரிகள் கூறியதாவது:
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், நேற்று தக்காளி பெட்டி (15 கிலோ) -- 500, தேங்காய் (ஒன்று) - 13, கத்தரிக்காய் கிலோ -- 65, முருங்கைகாய் - 110, வெண்டைக்காய் - 55, முள்ளங்கி - 30, வெள்ளரிக்காய் - 17, பூசணிக்காய் - 15, அரசாணிக்காய் - 15, பாகற்காய் - 55, புடலை - 25, சுரைக்காய் - 20, பீர்க்கங்காய் - 70, பீட்ரூட் - 50, அவரைக்காய் - 95, பச்சை மிளகாய் - 15 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், இந்த வாரம் காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதில், தேங்காய் ஒன்றுக்கு - 3 ரூபாய், முருங்கைக்காய் கிலோ - 40, பாகற்காய் - 21, சுரைக்காய் - 5 ரூபாய் விலை சரிந்துள்ளது. கத்தரிக்காய் - 30, வெண்டைக்காய், புடலை - 5, பச்சைமிளகாய் - 15 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. காய்கறிகள் வரத்து சராசரியாக உள்ளது.
இவ்வாறு, கூறினர்.