ADDED : ஜூலை 08, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ‘பிரதம மந்திரி விகாஸ் திறன்’ மேம்பாடு பயிற்சி நடக்கிறது.
இதில் சேர்ந்து பயிலுவோருக்கு மாதம், 2000 ரூபாய்- உதவித்தொகை வழங்கப்படுகிறது. பயிற்சி காலம் 75 முதல் 105 நாட்கள் வரை. மையத்தில் தங்கியும் பயிற்சி பெறலாம். வயது வரம்பு 14 முதல் 45 வரை.
மகளிருக்கு 33 சதவீதம் முன்னுரிமை உண்டு. பொருளாதார அடிப்படையில் நலிந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பயிற்சி வகுப்பு இம்மாத இறுதியில் துவங்கும்.
விபரங்களுக்கு: 94435 72956, 97901 32744.
