/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தம்பியை அடிக்க பிரம்பு கொடுத்த தலைமையாசிரியர் இடமாற்றம்
/
தம்பியை அடிக்க பிரம்பு கொடுத்த தலைமையாசிரியர் இடமாற்றம்
தம்பியை அடிக்க பிரம்பு கொடுத்த தலைமையாசிரியர் இடமாற்றம்
தம்பியை அடிக்க பிரம்பு கொடுத்த தலைமையாசிரியர் இடமாற்றம்
ADDED : மார் 14, 2025 11:01 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஜமீன்முத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர், சக மாணவர்களுடன் விளையாடும் போது சண்டை போட்டதாக கூறப்படுகிறது.
அந்த வகுப்பு ஆசிரியர், பள்ளி தலைமையாசிரியர் திலகவதியிடம் இதுபற்றி தெரிவித்ததாக தெரிகிறது. தலைமையாசிரியர், மாணவரை அழைத்து முட்டி போட வைத்ததாகவும், அந்த மாணவரின் அக்காவிடம் பிரம்பு கொடுத்து அடிக்க சொல்லியுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரித்த பெற்றோர், உறவினர்களுடன் இணைந்து, பள்ளியை முற்றுகையிட்டனர். கல்வித்துறை அதிகாரிகள், போலீசார் பேச்சு நடத்தினர். வட்டார கல்வி அலுவலர் சர்மிளா விசாரித்து, மாவட்ட கல்வி அலுவலர் தங்கராசுக்கு அறிக்கை சமர்பித்தார். அதன்படி, பள்ளி தலைமையாசிரியரை இடமாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
இது குறித்து, மாவட்ட கல்வி அலுவலர் கூறுகையில், ''பள்ளி தலைமையாசிரியர், போடிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்,'' என்றார்.