ADDED : ஆக 08, 2024 11:35 PM
பெ.நா.பாளையம்:கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் வரும், 23ம் தேதி காலை, 10:00 மணிக்கு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதில், 10ம் வகுப்பு பிளஸ், 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள் பங்கேற்று, வேலை வாய்ப்பு பெறலாம். முகாமில், கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம். பல முன்னணி தனியார் நிறுவனங்கள் முகாமில் கலந்து கொண்டு, பல்வேறு பணி காலி இடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
முகாமில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணி நியமன ஆணை உடனே வழங்கப்படும். முகாமில், பணி நியமனம் பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை நாடும் மனுதாரர்கள், www.tnprivatejobstn.gov.in மற்றும் www.ncs.gov.in இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.