sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

21ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

/

21ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

21ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

21ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்


ADDED : செப் 17, 2024 05:43 AM

Google News

ADDED : செப் 17, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் 21ம் தேதி, கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில்நடக்கிறது.

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் 21ம் தேதி காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, கோவை பொள்ளாச்சி பிரதான சாலை ஈச்சனாரியில் அமைந்துள்ள ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உற்பத்தி, ஜவுளித் துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி., மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உட்பட, 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர்.மனுதாரர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் candidate loginல் விபரங்களை பதிவு செய்தல் வேண்டும் மற்றும் https://forms.gle/d9Q8jXKptitP3hzy6 என்ற லிங்கிலும் விபரங்களை பதிவு செய்வது அவசியம்.

விபரங்களுக்கு, மனுதாரர்கள், 0422 - 2642388, 94990 55937 என்ற எண்ணிலும், வேலை அளிப்போர், 97901 99681 என்ற எண்ணிலும், காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us