/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
/
பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : ஜூன் 03, 2024 01:35 AM
கோவை;அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளை சார்பில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, பேரூரில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு, பேரூர் அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளைத் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.
துணைச் செயலாளர்கள் திருமலைசாமி, கவுரவ ஆலோசகர்கள் நடராஜன், மருதாசலம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுமதிஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவை, பொள்ளாச்சி முன்னாள் எம்.பி., தியாகராஜன் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
பத்து, பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, துணை வணிகவரி அதிகாரி ஜெயஸ்ரீ, வேடப்பட்டி கிராம கல்வி பாதுகாவலர் திருமுர்த்தி ஆகியோர், பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். பேச்சாளர் ஸ்ரீராம், மாணவர்களுக்கு கல்வியின் அவசியம் குறித்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.