/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்'
/
'அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்'
'அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்'
'அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்'
ADDED : செப் 12, 2024 09:34 PM

கோவை : கோவை மாநகராட்சி அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோயமுத்துார் அடுக்குமாடி சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம், புலியகுளத்தில் நடந்தது. கோரிக்கைகள் அடங்கிய மனுவை, நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் கார்த்திக்கிடம் வழங்கினர்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
எங்களையும் சாதாரண குடியிருப்புவாசிகளாக கருதி, மின்சார கட்டணத்தை சீர்படுத்தி, குடியிருப்புக்கான சாதாரண தீர்வையையே வசூலிக்க வேண்டும்.
எங்களுடைய குப்பைகளை மாநகராட்சி நேரடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். குடிநீர் வினியோகம் செய்யப்படும் முறை, தனி வீடுகளுக்கு சமமான கால நேரத்திலேயே வழங்கப்படுகிறது. இது, மிகவும் பற்றாக்குறையாக உளளது. குறைந்தபட்சம், 10 வீட்டுக்கு ஒரு இணைப்பு கொடுத்து வினியோக முறையை அதிகப்படுத்த வேண்டும்.
நடப்பாண்டு முதல் சொத்து வரி ஏற்றப்பட்டுள்ளது. குப்பை எடுப்பதற்காக தனியாக வரி விதிக்கப்படுகிறது. இது கூடுதல் சுமை மட்டுமின்றி, நீதிக்கு எதிரானது. எனவே, இதுபோன்ற குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை அமைச்சரின் பார்வைக்கு எடுத்து சென்று, உரிய நடவடிக்கைக்கு வழி வகுப்பதாக, மனுவை பெற்றுக் கொண்ட முன்னாள் துணை மேயர் கார்த்திக் தெரிவித்தார்.
கூட்டமைப்பு தலைவர் கண்ணன், உப தலைவர் ஜெயபால், செயலாளர் செந்தில்குமார் உட்பட, பல்வேறு அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

