/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லாரில் 2 லட்சம் பாக்கு மர நாற்றுகள் உற்பத்தி
/
கல்லாரில் 2 லட்சம் பாக்கு மர நாற்றுகள் உற்பத்தி
ADDED : மே 23, 2024 11:05 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே கல்லாரில் சுமார் 25 ஏக்கரில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது.
எலுமிச்சை, கொய்யா, பாக்கு போன்ற நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ரூ.10 முதல் 20 வரை நாற்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது இப்பண்ணையில் 2 லட்சம் பாக்கு மர நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணை மேலாளர் மோகன் குமார் கூறுகையில், தற்போது கல்லார் மற்றும் பர்லியார் அரசு தோட்டக்கலை பண்ணையில், சுமார் 2 லட்சம் மோஹித் நகர் மற்றும் மங்களா பாக்கு வகை மர நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நாற்றுகள் அனைத்தும் நன்கு வளர்ந்து வருகிறது. வரும் ஜூன் மாதம் முதல் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும். ரூ.20 க்கு ஒரு பாக்கு மர நாற்று விற்பனை செய்யப்படும், என்றார்.---