/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலிடெக்னிக் கல்லுாரியில் 'பிராஜெக்ட் எக்ஸ்போ'
/
பாலிடெக்னிக் கல்லுாரியில் 'பிராஜெக்ட் எக்ஸ்போ'
ADDED : ஏப் 19, 2024 12:37 AM

கோவை:கோவை பீளமேட்டில் உள்ள, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியில், மாணவர்களின் 'பிராஜெக்ட் எக்ஸ்போ' நடந்தது. மாணவர்கள் தங்களின் திறன்மிகு கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், பவுண்டரி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலிருந்து, 110 திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பி.எஸ்.ஜி., நிறுவனங்கள் இயக்குனர் (தேர்வுகள்) சந்திரமோகன், சிறந்த திட்டங்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் பிரகாசன், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கிரிராஜ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

