sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தரமின்றி திட்டப்பணி; தி.மு.க., நிர்வாகி புகார்

/

தரமின்றி திட்டப்பணி; தி.மு.க., நிர்வாகி புகார்

தரமின்றி திட்டப்பணி; தி.மு.க., நிர்வாகி புகார்

தரமின்றி திட்டப்பணி; தி.மு.க., நிர்வாகி புகார்


ADDED : ஆக 13, 2024 11:51 PM

Google News

ADDED : ஆக 13, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;ஆனைமலை அடுத்த கோட்டூர் பேரூராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு, முறையாக குடிநீர் வினியோகிக்கும் வகையில், 'அம்ருத்' திட்டத்தின் வாயிலாக, 28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, 10வது வார்டு பகுதியில், புதிதாக நீர்த்தேக்க தொட்டி ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.

இக்கட்டுமானம், தரமின்றி மேற்கொள்ளப்படுவதாக, அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க., வார்டு செயலாளர் செந்தில்குமார் குற்றம் சாட்டியுள்ளார். பேரூராட்சித்தலைவர், வார்டு கவுன்சிலர் ஆகியோர் ஒப்பந்ததாரரிடம் கமிஷன் பெற்றுக் கொண்டதால் தான், தரமின்றி கட்டுமானப் பணிகள் நடப்பதாக வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளார்.

பேரூராட்சி தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்தவர் பொறுப்பு வகிக்கும் நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகி ஒருவர், திட்டப் பணிகள் குறித்து விமர்சனம் செய்துள்ளது, அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us